மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக கே.கருணாகரன் நியமனம்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவை விசேட தரத்தை சேர்ந்தவரும் , தற்போதைய கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் காணி அமைச்சின் செயலாளராக கடமையாற்றும் கே. கருணாகரன் நியமனம் பெற்றுள்ளார்.
இன்று பிற்பகல் இதற்கான அமைச்சரவை நியமன கடிதத்தினை பெற்றுக் கொண்டுள்ளார்.

- Sathasivam Nirojan