பிரியங்கா காந்தி வெற்றி

கேரள மாநிலம், வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி, சனிக்கிழமை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து 55,000 வாக்குகளுக்கு மேல் பெற்று முன்னிலை வகித்தார் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அந்த மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளைச் சனிக்கிழமை காலை 8 மணிக்கு எண்ணத் தொடங்கினர்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வேட்பாளரும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி 55,000 வாக்குகளுக்கு மேல் பெற்று வந்தார்.

கடந்த மக்களவைத் தோ்தலில், உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, இரண்டிலும் வெற்றிபெற்றாா்.

வயநாடு தொகுதியில் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி, தனது குடும்பத்தின் கோட்டையான ரேபரேலி தொகுதியைத் தக்கவைத்தாா்.

வயநாடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து அவர் விலகியதால் அங்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது.

காங்கிரசின் செல்வாக்குமிக்க வயநாடு தொகுதியை தக்கவைக்கும் நோக்கில், ராகுலின் சகோதரியும் கட்சியின் பொதுச் செயலருமான பிரியங்கா காந்தியை அந்தக் கட்சி களமிறக்கியது.

பிரியங்கா காந்தி முதல்முறையாக போட்டியிட்ட தோ்தல் என்பதால், வயநாடு தொகுதி இடைத்தோ்தல் முடிவு பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சுமார் 6 லட்சம் வாக்குகளுடன் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றுள்ள பிரியங்கா காந்தி, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கேரள மாநிலம், வயநாடு உட்பட 2 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 13 மாநிலங்களில் அடங்கிய 48 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தல்களின் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை (நவம்பர் 23) காலை 8 மணிக்குத் தொடங்கியது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைகள் திறக்கப்பட்டன.

காலை 9 மணிக்குத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 86,303 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார்.

ஆளும் இடதுசாரி கூட்டணி சாா்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சத்யன் மொகேரி 26,245 வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும் பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் 16,223 வாக்குகளுடன் மூன்றாவது இடத்திலும் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.