மூன்றாம் அலைப் பாதிப்பு 1,723 ம், 132 தொற்றும்.

மூன்றாம் அலைப் பாதிப்பு 1,723
இன்றும் 132 பேருக்குத் தொற்று
இலங்கையில் இன்றும் 132 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கொரோனாவின் மூன்றாவது அலையான மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணியில் சிக்கி தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டவர்களும், ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்புகளைப் பேணியவருமே இன்று புதிய தொற்றளர்களாக அடையாளம் கணப்பட்டுள்ளனர்.
இதனால் மினுவாங்கொடை கொரோனா கொத்தணிப் பரவலில் சிக்கிய மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 1,723 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 170 ஆக அதிகரித்துள்ளது. அதில் 3 ஆயிரத்து 357 பேர் குணமடைந்துள்ளனர்.1,800 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 13 பேர் சிகிச்சைகளின்போது உயிரிழந்துள்ளனர்.