அரை டன் போதைப்பொருள் பறிமுதல்.
மாலைதீவு கடலோரக் காவல்படையினர் போதைப்பொருள் சரக்குகளுடன் மீன்பிடி படகில் பயணித்தவர்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய 05 பேரை கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் 344 கிலோ ஐஸ் போதைப்பொருளும், 124 கிலோ கொக்கெய்ன் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று மாலத்தீவு கடலோர காவல்படையினர் கடற்படையினரின் கூற்றுப்படி “அஷேன் புத்தா” என்ற பல நாள் மீன்பிடி படகை தடுத்து வைத்துள்ளனர்.
இலங்கை கடற்படை மற்றும் மாலைதீவு கடலோர காவல்படையினர் இணைந்து நடத்திய புலனாய்வு பரிமாற்றத்தின் விளைவாக இந்த கைது நடந்துள்ளது.