காவலர் எடுக்கும் காணொளிகளை பதிவேற்றம் செய்ய புது செயலியைப் பயன்படுத்தும் காவலர்கள்.
விசாரணை, வாக்குமூலம் பெறும்போது காவலர் எடுக்கும் காணொளிகளை பதிவேற்றம் செய்ய புதிய செயலி நடைமுறையில் வர இருக்கிறது.
குமரி மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
எஸ்.பி. சுந்தரவதனம் பேசுகையில், “காவல்துறை புலன் விசாரணை நடவடிக்கைகளில் எடுக்கப்படும் காணொளி பதிவுகள் நீதிமன்ற விசாரணைக்கு பயன்படுத்தும் வகையில் விரைவில் பயன்படுத்தப்பட உள்ள ‘*e shakshya*’ செயலியில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன. இதன் செயல்பாடுகள் குறித்து அனைவரும் தெரிந்திருக்க வேண்டும். புலன் விசாரணை நடைமுறைகளில் இதை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்,” என அறிவுறுத்தினார்.