டொக்டர் அர்ச்சுனாவின் நடத்தை குறித்து சபாநாயகரின் முடிவு.
இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் அர்ச்சுனா இராமநாதனுடன் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சபாநாயகர் அசோக ரங்வல தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்து இனவாதத்தை உருவாக்கும் வகையில் எம்.பி அறிக்கைகளை வெளியிட்டார்.
இதன்படி, இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினருடன் கலந்துரையாடி மேலதிக நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (24) பிற்பகல் கண்டிக்கு விஜயம் செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சபாநாயகர் அசோக ரங்வல மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“ஒரு தனிநபராக அவரது லட்சியம் என்னவென்று எங்களுக்குத் தெரியாது. அவர் பிரதிநிதித்துவப்படுத்திய மக்களின் அபிலாஷை மிகவும் தெளிவானது. இன்று நாட்டில் அவ்வாறானதொன்றை மக்கள் எதிர்பார்க்கவில்லை. அந்த மக்கள் வடக்கு, மேற்கு அல்லது கிழக்காக இருக்கலாம், அவர்கள் நாட்டை நல்லிணக்கத்துடன் அபிவிருத்தி செய்ய செயல்படுவார்கள் என்று அனைத்து மக்களும் நம்புகிறார்கள். இது ஒரு தனி நபரால் செய்யப்பட்டது என்பது எங்களுக்குத் தெரியும். அதுபற்றி அவரிடம் பேசி, அவரது அனைத்து முகநூல் கணக்குகளையும் சரிபார்த்தோம். நாமும் அவருடன் பேசலாம், புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு எதிர்காலத்தில் இதைத் தெளிவுபடுத்திக்கொள்வோம்.” என்றார் சபாநாயகர் அசோக ரங்வல .