இஸ்ரேல் – லெபனான் எல்லையில் கடும் சண்டை
ஐரோப்பிய ஒன்றியம் சண்டை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளபோதும் இஸ்ரேலும் ஹிஸ்புல்லா அமைப்பும் கடும் சண்டையில் ஈடுபட்டிருக்கின்றன.
எல்லை பகுதியில் கடும் சண்டை நிலவுவதாக லெபனானின் அரசாங்க ஊடகம் தெரிவித்தது.
தனது எல்லையை நோக்கி 250 எறிபடைகள் பாய்ச்சப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது.
லெபனானிற்குப் பயணம் மேற்கொண்ட ஐரோப்பிய ஒன்றிய மூத்த அரசதந்திரி ஜோசப் போரல் (Josep Borrell) இருதரப்பிற்கும் இடையே உடனடி சண்டை நிறுத்தம் கொண்டுவரப்படவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
லெபனான் நெருக்கடிநிலையை நெருங்கிவிட்டதாக அவர் எச்சரித்தார்.
பூசலால் சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து சுமார் 3,700 பேர் மாண்டதாக லெபனானின் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இஸ்ரேலில் சுமார் 130 பேர் மாண்டதாக அதிகாரிகள் கூறினர்.