டெல்லி அணி 13 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் 13வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. துபாயில் நேற்று நடந்த லீக் போட்டியில் டில்லி, ராஜஸ்தான் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற டில்லி அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.
டில்லி அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ராஜஸ்தான் அணி வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் வீசிய போட்டியின் முதல் பந்தில் போல்டானார் பிரித்வி (0). ரகானே 2 ரன் மட்டும் எடுத்தார். தவானுடன் இணைந்தார் ஸ்ரேயாஸ். தியாகியின் பந்துகளை அவ்வப்போது பவுண்டரிக்கு அனுப்பினார் தவான். இவர், 30வது பந்தில் ஐ.பி.எல்., அரங்கில் 39வது அரைசதம் எட்டினார். மூன்றாவது விக்கெட்டுக்கு 85 ஓட்டஙகள் சேர்த்த நிலையில் தவான் (57) அவுட்டானார்.
பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்த ஸ்ரேயாஸ், உனத்கட் ஓவரில் 2 சிக்சர் அடித்து, அரைசதம் அடித்தார். 43 பந்தில் 53 ரன்கள் எடுத்த ஸ்ரேயாஸ், கார்த்திக் தியாகி ‘வேகத்தில்’ அவுட்டானார். அலெக்ஸ் கேரி 14, ஸ்டாய்னிஸ் 18, அக்சர் படேல் 7 ரன் எடுத்தனர். டில்லி அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் சார்பில் ஆர்ச்சர் 3, உனத்கட் 2 விக்கெட் வீழ்த்தினர்.
எளிய இலக்கைத் துரத்திய ராஜஸ்தான் அணிக்கு ஸ்டோக்ஸ், பட்லர் (22) ஜோடி துவக்கம் கொடுத்தது. ஸ்மித் (1), அஷ்வின் சுழலில் சிக்கினார். ஸ்டோக்ஸ் 41, சாம்சன் 25 ரன் எடுத்தனர். கடைசி ஓவரில் 22 ரன் தேவைப்பட்ட நிலையில், 8 ரன்கள் தான் எடுக்கப்பட்டன.
ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 148 ஓட்ங்களை மட்டும் எடுத்தது. டில்லி அணி 13 ரன்னில் வெற்றி பெற்றது