சுகாதார செயலாளர் மஹிபால பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் வெளியானது!

சுகாதார செயலாளர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் பாலித மஹிபால சில தொழிற்சங்கங்களுக்கு ஆதரவாக செயற்பட்டமையே அவரது பதவி நீக்கத்திற்கு காரணம் என சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செயலாளர் கடந்த சனிக்கிழமை காலை சுகாதார அமைச்சுக்கு கடமைக்காக வந்தபோது, ​​அமைச்சில் கடமையாற்றிய வத்சலா பிரியதர்ஷனி என்ற மேலதிக செயலாளர் , செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், செயலாளரின் வருகையின் பின்னர், செயலகத்தின் பணிகளை பார்வையிடுவதற்காக வத்சலா பிரியரதர்ஷனி, ஜனாதிபதி செயலகத்தினால் நியமிக்கப்பட்டுள்ளதாக செயலாளருக்கு தெரிய வந்துள்ளது. அதனுடன் அவர் தனது கடமைகளை விட்டுச் சென்றதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

டொக்டர் பாலித மஹிபால சில தொழிற்சங்கங்களுக்கு ஆதரவாக செயற்பட்டமை, சில தொழிற்சங்க பிரதிநிதிகளை காலை 6.00 மணியளவில் சந்தித்து கலந்துரையாடியமை மற்றும் சில வேலைகளை புறக்கணித்தமையே அவரை செயலாளர் பதவியிலிருந்து நீக்குவதற்கு காரணம் என அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.