மாவீரரை உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்க தயார் நிலையில் புதுக்குடியிருப்பு நகர் பகுதி.

தாயக விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த வீரமறவர்களைப் போற்றி வணங்கும் மாவீரர் நாளுக்கான அலங்கரிப்புப் பணிகள் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் நடைபெற்றுள்ளன.
அந்தவகையில் மாவீரர்களை நாளை புதன்கிழமை உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப் புதுக்குடியிருப்பு நகர் பகுதி தயார் நிலையில் இருக்கின்றது.