வைத்தியசாலைச் சமூகத்தின்,அமைதி வழி கவனயீர்ப்புப் போராட்டம்.(video)

மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலையின்வைத்தியர்கள்,ஊழியர்கள்,சுகாதாரப் பணியாளர்கள் இணைந்து இன்றைய தினம்(26.11) மதியம் 1 மணியளவில் வைத்திய சாலைக்கு முன்பாக, அடையாள, கவனயீர்ப்புப்,   போராட்டம் ஒன்றை அமைதியான முறையில் முன்னெடுத்தனர்.

கொட்டும் மழையில் முன்னெடுக்கப் பட்ட,குறித்த போராட்டமானது, வைத்திய சேவைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் , பகல் 12.00 மணி தொடக்கம்  2.00 மணி வரையிலான உணவு இடைவேளையின் போது, அமைதியான முறையில் மேற்கொள்ளப்பட்டது.

மன்னார்  மாவட்டப்   பொது வைத்தியசாலையில்  அண்மையில் உயிரிழந்த  தாய்  மற்றும்  சிசுவின் மரணம்  தொடர்பில்  இடம்  பெற்ற போராட்டத்தின்  போது   மக்கள் உண்மைகளை  அறியாது  ஒட்டு மொத்த வைத்தியசாலை ஊழியர்கள், மற்றும் வைத்தியசாலைச் செயற்பாடுகளை இழிவுபடுத்தியமை தொடர்பில்,

தமக்கு ஏற்பட்டுள்ள மன ரீதியான பாதிப்பு, மற்றும் நிர்வாக ரீதியான, பிரச்சினைகளை, மக்கள் அறிந்து கொள்ள செய்யும் விதமாகவே குறித்த, கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது.

கடந்த (19.11)வைத்தியசாலையில் நிகழ்ந்த தாய் சேய் மரணத்திற்கான,உண்மைக் காரணத்தை அறிந்துகொள்ளாது. மக்களால்  மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தினாலும், அதன் போது அவர்கள் நடந்து கொண்ட விதத்தினாலும், அப்போதும் இப்போதும் மெளனிகளாக்கப் பட்டுள்ளோம் என்பதை மக்களுக்குத் தெரிவிக்கும் முகமாக அனைவரும்  கறுப்புதுணியினால் வாய்களை கட்டிக்   குறித்த கவனயீர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

மேலும், அவர்கள் ஏந்தியிருந்த பதாதைகளில்,

சமூக  ஊடகங்களே மக்களுக்கு உண்மையை உரையுங்கள்வன்முறைகளைத்  தூண்டாதீர்கள்,

“வைத்தியசாலை அது உங்கள் சொத்து அதை சேதப் படுத்தாதீர்கள்,

“உயிர்காக்க போராட்டம் அதுதான் எங்கள் சேவையின் பிரதான நோக்கம்,

“100 பேர் செய்ய வேண்டிய வேலைகளை நாங்கள் 50 பேர் செய்கின்றோம் அதைஎப்போதாவது சிந்தித்தீர்களா?,

வீண் பழி சுமத்தாதீர்கள் எங்கள் வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஏதாவாது செய்யுங்கள்,

வீசி எறியாதீர்கள் எங்களை மட்டுமல்ல எம் மீது உம் சொற்களையும், போன்ற பல்வேறு, வாசகங்கள் எழுதப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

.

Leave A Reply

Your email address will not be published.