ஹிஸ்புல்லாவுடன் போர் நிறுத்தம் செய்வதில் இஸ்ரேல் கவனம்.
லெபனானின் ஹிஸ்புல்லாவுடன் போர் நிறுத்தம் செய்வதில் இஸ்ரேல் கவனம் செலுத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு அங்கீகாரம் கிடைக்கும் என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை எதிர்பார்த்துள்ளதாகவும், அமெரிக்கா மற்றும் பிரான்ஸின் தலையீட்டில் இந்த நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
60 நாட்களுக்கு முன்மொழியப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கை அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் இருதரப்புக்கும் இடையிலான முரண்பாடுகள் 14 மாதங்கள் நீண்ட காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற வாய்ப்பு ஏற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், போர்நிறுத்த உடன்படிக்கையில் கவனம் செலுத்தப்பட்ட போதிலும், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.