களனி ஆறு பெருக்கெடுத்துள்ளது… கொழும்பில் பெரும் வெள்ள அபாயம்…
களனி ஆற்று பகுதிகளில் கடந்த சில மணித்தியாலங்களில் பெய்து வரும் கணிசமான மழையினால் அடுத்த 48 மணித்தியாலங்களில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, சீதாவக, தொம்பே, ஹோமாகம, கடுவெல, பயகம, கொலன்னாவ, கொழும்பு மற்றும் வத்தளை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு வெள்ளம் வரும் அபாயம் நிலவுகிறது.
இது தொடர்பில் அப்பகுதி மக்கள் அவதானம் செலுத்த வேண்டுமென நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.