இ.போ.ச பேருந்தின் மீது மரம் ஒன்று வீழ்ந்துள்ளது.
வவுனியா செட்டிகுளம் பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற இ.போ.ச பேருந்தின் மீது மரம் ஒன்று பாறி வீழ்ந்துள்ளது எனினும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று இ.போ.ச ஊழியர்கள் தெரிவித்துள்ளனர் .
இன்று பிற்பகல் 2 மணியளவில் செட்டிகுளத்திலிருந்து வவுனியாவிற்கு பயணத்தை மேற்கொள்வதற்கு தயாராக இருந்த இ.போ.ச பேருந்து மீது பேருந்து நிலையத்தில் தரித்து நின்றபோது எதிர்பாராமல் ஏற்பட்ட காற்றின் வேகத்தினால் அருகிலிருந்த பாரிய பாலை மரம் ஒன்று திடீரென்று பேருந்தின் மீது முறிந்து வீழ்ந்துள்ளது .
எனினும் பேருந்தில் இருந்தவர்களுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்று இ.போ.ச ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.