மாடு மேய்த்துக்கொண்டிருந்த 5 பெண்கள் கார் மோதி பலி!

மாடு மேய்த்துக்கொண்டிருந்த 5 பெண்கள் கார் மோதி சம்வ இடத்திலே பலியாகியுள்ளனர்.
சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தின் பழைய மகாபலிபுர சாலை ஓரமாக பண்டிதமேடு என்ற பகுதியில் 5 பெண்கள் மாடு மேய்த்து வந்துள்ளனர்.
அப்போது வேகமாக வந்த கார் மோதி மாடு மேய்த்துக்கொண்டு இருந்த விஜயா, யசோதா, லோகாம்பாள், கௌரி, ஆனந்தம்மாள் ஆகிய 5 பெண்களும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
காரில் பயணித்தவர்கள் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் எனவும், அவர்கள் போதையில் இருந்ததாகவும் அப்பகுதி மக்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். அதில் இரண்டு பேரை பிடித்த பொதுமக்கள் அவர்களை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மற்றவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.