வடிகாலமைப்புச் சீரின்மையே வெள்ள அனர்த்தத்துக்குக் காரணம் – வவுனியா கூட்டத்தில் ரவிகரன் எம்.பி. சுட்டிக்காட்டு.

வடிகாலமைப்புச் சீரின்மையாலேயே அதிகளவான இடங்களில் வெள்ள நீர் தேங்கியிருந்து பாரிய அளவில் வெள்ள அனர்த்தம் ஏற்படக் காரணமாக அமைந்தது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டினார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் அனர்த்த நிலமைகள் குறித்து ஆராய்வதற்காக இன்று நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வன்னியில் அதிக இடங்களில் வெள்ளம் ஏற்பட்டமைக்கு வடிகாலமைப்புச் சீரின்மையே காரணம். உரிய திணைக்களங்கள் வடிகாலமைப்பு விடயத்தில் அதிக கவனத்துடன் செயற்பட வேண்டும்.

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு மற்றும் நிவாரணங்கள் வழங்க வேண்டும். தறப்பாள் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.