மாவீரர் நாளில் மகனுக்காக சுடரேற்றிய தந்தை இறப்பு!

முல்லைத்தீவு – முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் தனது மகனுக்காகச் சுடரேற்றிவிட்டுச் சென்ற தந்தை, தனது வீட்டில் திடீர் சுகவீனத்தால் உயிரிழந்துள்ளார்.
கப்டன் இசைக்கலைஞன் என்ற மாவீரரின் தந்தையான அமரசிங்கம் சண்முகலிங்கம் என்பவரே நேற்றுமுன்தினம் இவ்வாறு உயிரிழந்தவராவார்.