மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்படையினரால் மூன்று அனர்த்த நிவாரண குழுக்கள்…

தற்போது ஏற்பட்டுள்ள மோசமான காலநிலையை கருத்தில் கொண்டு, மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கடற்படையினரால் மூன்று (03) அனர்த்த நிவாரண குழுக்கள் மாவடிஓடை, மயிலவட்டுவான் மற்றும் மண்முனை பாலம ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்டன. செங்கலடி, மாவடிஓடை பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கிய மூன்று குடும்ப அங்கத்தவர்களை நேற்று (27) மீட்டுள்ளது.

இதன்படி, இலங்கை கடல் மற்றும் கடற்றொழில் முகவர் நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்ட நிவாரண நடவடிக்கையில், மட்டக்களப்பு செங்கலடி மாவடிஓடை பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு விவசாய நிலத்தில் சிக்கிய சிறு குழந்தை உட்பட மூவர் மீட்கப்பட்டு, ஏறாவூர் மாவட்டச் செயலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மேலும், வெள்ள அபாயத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்குவதற்காக கடற்படை நூற்று முப்பத்தைந்து (135) கூடுதல் நிவாரணக் குழுக்களை தயார் நிலையில் வைத்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.