100 ஆண்டுகளுக்குப் பிறகு தென்கொரியாவில் வரலாறு காணாத பனிப்பொழிவு.

தென்கொரியாவின் சியோல் 100 ஆண்டுகளுக்கு பிறகு பனியால் மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த குளிர்காலத்தின் முதல் பனிப்பொழிவுக்கு முந்தைய நாள், சியோலில் 16.5 சென்டிமீட்டர் பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாகவும், 1907 ஆம் ஆண்டில் இவ்வளவு பெரிய அளவிலான பனிப்பொழிவு ஏற்பட்டதாக கொரிய வானிலை நிர்வாகம் கூறியதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்தன. முன்னதாக, இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பனிப்பொழிவு நவம்பர் 28, 1972 அன்று பதிவானது, அப்போது பனிப்பொழிவின் அளவு 12.4 செ.மீ., என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடும் பனிப்பொழிவு காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தெற்கு சியோலில் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கிழக்கு கங்காங் மாநிலத்தில் வோன்ஜு என்ற இடத்தில் நெடுஞ்சாலையில் 53 வாகனங்கள் சிக்கிக் கொண்டதாகவும், அங்கு ஏற்பட்ட விபத்துகளில் 11 பேர் காயமடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சியோலின் சில பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காரணமாக அதிகாரிகள் 156 விமானங்களை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.