தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் மாநாட்டிற்கு சென்றபோது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு விஜய் நிதியுதவி

தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் மாநாட்டிற்கு சென்றபோது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த ஒக்டோபர் மாதம் 27 -ம் திகதி விக்கிரவாண்டியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது.
இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் வருகை தந்தனர்.
இந்த மாநாட்டிற்கு புறப்பட்டபோதும், மாநாடு முடிந்து வீடு திரும்பும்போதும் 6 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
சென்னையைச் சேர்ந்த வசந்தகுமார், ரியாஸ், சார்லஸ், திருச்சி மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சத்தை அக்கட்சியின் தலைவர் விஜய் வழங்கியுள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தை பொறுத்து கூடுதல் நிதி, இறந்தவர்களின் குழந்தைகள் கல்வி செலவு ஆகியவற்றை தமிழக வெற்றி கழகம் ஏற்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது.