சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினம் இன்று அனுஷ்டிப்பு.

சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினம் இன்று அனுஸ்டிக்கப் படுவதை முன்னிட்டு யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட விசேட தேவையுடையோர் (கண்) 10 பேருக்கான வெள்ளைப் பிரம்புகள் யாழ்மாவட்ட சிற்றிலயன்ஸ் கழகத்தின் அனுசரணையுடன் பிரதேச செயலக திறந்த வெளி மண்டபத்தில் பி.ப 3.00 மணிக்கு வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர், சிற்றிலயன்ஸ் கழக மாவட்ட ஆளுநரின் பிரதிப் பொருளாளர் லயன்ஸ் எஸ். பாலகுமார், சிற்றிலயன்ஸ் கழக ஊடகப்பிரிவு உத்தியோகத்தர் ஐங்கரன், சிற்றிலயன்ஸ் கழக உறுப்பினர்கள், சமூக சேவை உத்தியோகத்தர் மற்றும் விழிப்புலனற்றோர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டு வெள்ளைப் பிரம்புகளை வழங்கி வைத்தனர்.