மூத்த குடிமக்கள் இனி வரி செலுத்த வேண்டியதில்லை என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தி பொய்யானது – மத்திய அரசு
75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இனி வரி செலுத்த வேண்டியதில்லை என பரவும் செய்தி உண்மையா? அது பற்றி காணலாம்..
நாட்டின் மூத்த குடிமக்களுக்கு வரி செலுத்த வேண்டியதில்லை, ஏனெனில் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டியதில்லை. 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதிலிருந்து மூத்த குடிமக்களுக்கு விலக்கு அளிக்கும் நிபந்தனைகளை வழங்குகிறது.
விலக்கு பெறுவதற்கான நிபந்தனைகள்:
மூத்த குடிமகன் 75 வயது அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். மூத்த குடிமக்கள் முந்தைய ஆண்டில் ‘குடியிருப்பு’ ஆக இருக்க வேண்டும். இப்படி ஒரு விளம்பரம்தான் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இனி வரி செலுத்த வேண்டியதில்லை என சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி முற்றிலும் பொய்யானது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.