வடக்கின் வெள்ள அனர்த்தம் குறித்து ஆளுநருடன் சிறீதரன் எம்.பி. சந்திப்பு.
வடக்கின் வெள்ளப் பேரிடர் பாதிப்பு தொடர்பில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இன்று ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கான உடனடி உதவிகளை வழங்கல், காலநிலைத் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்வுக்குத் திரும்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்வதற்கான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.