இரணைமடுக் குளத்தின் தற்போதைய நிலை: நேரில் சென்று பார்வையிட்ட சிறீதரன் எம்.பி.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவடட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், இரணைமடுக் குளத்தின் தற்போதைய நிலை தொடர்பாக நேரில் சென்று அவதானித்தார்.
இதன்போது கிளிநொச்சி பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளரான பொறியியலாளர் க.கருணாநிதி மற்றும் கிளிநொச்சி கிழக்கு பிரிவுக்கான நீர்ப்பாசனப் பொறியியலாளர் பிரகாஸ் ஆகியோரையும் நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.