கூகுள் மேபிப்ல் உள்ள அறிவுறுத்தல் மூலம் சென்ற கார் விபத்தில் சிக்கியது .
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் சாலையின் ஒரு பகுதியில் இடிந்து விழுந்த பாலத்தின் மீது கார் ஓட்டிச் சென்றபோது, காரில் பயணித்த மூவர் ஆற்றில் விழுந்ததாக வெளிநாட்டு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ஆண்டின் முதல் பாதியில் உத்தரபிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் பாலம் இடிந்து விழுந்ததை உள்ளூர்வாசிகள் அறிந்திருந்தும், அந்நியர்கள் போன்ற சுற்றுலாப் பயணிகள் அத்தகைய அபாயத்தை அறியாததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கூகுள் மேப்ஸில் உள்ள அறிவுறுத்தல்களே விபத்துக்குக் காரணம் என பிரதேசவாசிகள் உட்பட பெருமளவான மக்கள் குற்றம் சுமத்திய போதிலும், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நான்கு பொறியியலாளர்களுக்கு எதிராக பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆபத்தான பாலம் தொடர்பாக சாலைத் தடைகளோ, வழிகாட்டி பலகைகளோ நிறுவப்படவில்லை.