தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு தனது ஆதரவை கொடுப்பதாக அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கம் எடுக்கும் சரியான தீர்மானங்களுக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மதிப்பாய்வில் எட்டப்பட்ட உடன்படிக்கைகளின் அடிப்படையில் நாட்டிற்கு 300 மில்லியன் டொலர்கள் கிடைக்கும், இது நாட்டுக்கு மிகவும் நல்ல விஷயம்.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை ஜனாதிபதி உரிய முறையில் நிர்வகித்து வருவதாகவும் அது சாதகமான அறிகுறி எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே ஜனாதிபதி மேற்கொள்ளும் முக்கிய நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தமது கட்சி தயாராகவுள்ளதாக சாணக்கியன் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.