இன்சுலின் பிரச்சனை நான்கு நாட்களில் தீர்ந்துவிடும்.
பற்றாக்குறையாக உள்ள இன்சுலின் வகையை எதிர்வரும் 4 நாட்களுக்குள் இலங்கைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மருத்துவ வழங்கல் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் வைத்திய ஜி.விஜேசிரிய தெரிவித்துள்ளார்.
தற்போது பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல் தொகுதி இன்சுலின் விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தியதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.