உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான இறுதி முடிவு அடுத்த வாரம்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்வதா இல்லையா என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக கட்சித் தலைமைக் கூட்டம் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.

சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு எடுக்கப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படும் என பொது நிர்வாக அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.