இலங்கைக்காக வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற கராத்தே வீரர்கள்.

11ஆவது பொதுநலவாய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் 21 வயதுக்குட்பட்ட 50 கிலோ எடைப் பிரிவில் இலங்கையின் தருஷிகா சேனாரத்ன வெள்ளிப் பதக்கம் வென்றார்.
மேலும் மனுதி இருகல்பண்டார 18 வயதுக்குட்பட்ட 59 கிலோகிராம் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
11வது காமன்வெல்த் கராத்தே சாம்பியன்ஷிப் தென்னாப்பிரிக்காவின் டர்பனில் நடைபெற்றது.
இவ்விரு விளையாட்டு வீரர்களும் அனுராதபுரம் மத்திய மகா வித்தியாலயத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இதன்படி முதன்முறையாக பொதுநலவாயப் போட்டி ஒன்றில் வடமத்திய பிரதேசத்தில் உள்ள ஒரே பாடசாலையில் போட்டியிட்டு இலங்கைக்காக வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வெல்வதில் இவ்விரு வீராங்கனைகளும் வெற்றி பெற்றுள்ளனர்.