பெஞ்சல் புயல் கரையை கடந்தது .
பெஞ்சல் புயல் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே முழுமையாக கரையை கடந்தது, தற்போது விழுப்புரம் நிலப்பரப்பில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. குறுகிய நேரத்தில் தீவிர மழையாக விழுப்புரம் மாவட்டம் மயிலம் 50 செ.மீ, புதுச்சேரியில் 47 செ.மீ அதித கனமழை கொட்டி தீர்த்தது.
புதுச்சேரியில் குறுகிய நேர தீவிர மழை மீண்டும் பெய்ய துவங்கியுள்ளது. புதுவை நகரில் வெள்ளப்பெருக்கு எடுக்கும் சூழல், மக்கள் பாதுக்காப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
தற்போது விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், சேலம், நாமக்கல்,கரூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பரவலாக கனமழை பதிவாகி வருகிறது. தரைக்காற்று வடமாவட்டங்களில் சற்றே அதிகரித்து காணப்படுகிறது.