அ.ம.மு.கவின் பொருளாளரான வெற்றிவேல் கொரணா தொற்றால் மரணம்.
அ.ம.மு.கவின் பொருளாளராக இருந்து வந்தவர் வெற்றிவேல். இவர் கடந்த சில மாதங்களாக கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வந்தார். மேலும் சர்க்கரை நோயாளியான அவரது உடல் நிலை மோசமடைந்தது.இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
காங்கிரசில் அரசியல் வாழ்க்கையை துவங்கிய வெற்றி வேல் பின்னர் அதிமுகவில் இணைந்தார்.2011 ல்சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார் தொடர்ந்து இத்தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட வேண்டி தனது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்தார்.
தொடர்ந்து 2016-ல் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா அணிக்கு மாறினார். தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் குழுவிலும் இடம் பெற்றார்.
அரசுக்கு எதிராக செயல்பட்டதாக 18 எம்.எல்.ஏக்களின் மீது எடுத்த நடவடிக்கை காரணமாக தனது எம்.எல்.ஏ.,பதவியை இழந்தார் தொடர்ந்து தினகரன் துவக்கிய அ.ம.மு.க கட்சியில் அதன் பொருளாளராக இருந்து வந்தார். இன்று உடல் நலக்குறைவால் காலமானார்.