நயினாதீவு – குறிகட்டுவான் படகுச்சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம்.
சீரற்ற காலநிலையால் தடைப்பட்டிருந்த நயினாதீவு குறிகட்டுவான் படகுச்சேவை இன்று 01.12.2024 தொடக்கம் ஆரம்பம்.
சனி – ஞாயிறு திங்களில் ஒரு மணித்தியாலத்திற்கு ஒன்று எனும் சேவையில் ஈடுபடவுள்ளதுடன் திங்கட்கிழமையில் இருந்து வழமை போன்று இடம்பெறும் என்பதனை பயணிகளுக்கு தெரிவித்துக் கொள்கின்றனர் நயினாதீவு படகு உரிமையாளர் சங்கத்தினர்.
நயினாதீவில் இருந்து முதல் படகுச்சேவை காலை 6:30மணிக்கும் குறிகட்டுவானில் இருந்து இறுதிப்படகுச் சேவை மாலை 05:00மணிக்கும் இடம்பெறும் என்பதனை அனைத்துப் பயணிகளுக்கும் அறியத்தருகின்றனர்.