மெதிவெல வீடுகள் அரசு உறுப்பினர்களுக்கு கூட்டு பயன்பாட்டு முறையில் வழங்கப்படும் -அரசாங்கம் அறிவிப்பு
அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ குடியிருப்புகள் வழங்காமை, வரியில்லா வாகன அனுமதிப்பத்திரம் ரத்து, 5 வருட காலத்திற்கு கடமை அடிப்படையில் அரசாங்க வாகனம் வழங்குதல் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் தொடர்பான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என அரசாங்கம் மீண்டும் வலியுறுத்துகிறது.
அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வீட்டுமனைகள் வழங்கப்படாது எனவும், கூட்டு பயன்பாட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகள் தேவைப்படும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு மெதிவெல வீட்டுத் தொகுதியில் வீடுகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எம்.பி.க்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த வரியில்லா வாகன அனுமதிப்பத்திரம் இனி வழங்கப்படாது எனவும் , எம்.பி.க்களின் பதவிக் காலம் முடிந்த பிறகு அரசிடம் மீண்டும் ஒப்படைக்கும் விதத்திலான, அரசாங்கத்திடம் இருந்து கடமை வாகனம் வழங்கும் வேலைத்திட்டம் எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் வலியுறுத்துகின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் குறைக்கப்படுவது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி வழங்கிய தேர்தல் வாக்குறுதிக்கு அமைவாகவே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. எம்.பி.க்களுக்கு வரியில்லா வாகனங்கள், அமைச்சர்கள் தங்கும் விடுதிகள், எம்.பி.க்களின் ஓய்வூதியம் ரத்து, மக்கள் பிரதிநிதிகளுக்கு சொகுசு கார்கள் கிடையாது என்பது தேசிய மக்கள் சக்தி அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் அடங்கும்.
இதன்படி, தேசிய சக்தியின் எம்.பி.க்களுக்குக் கூட மெதிவெல வீடுகள், நாடாளுமன்றக் காலத்தில் அந்தந்தப் பணிகளுக்கு இடம் தேவை என்ற அடிப்படையிலேயே வழங்கப்படுவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மெதிவெலவில் 120 வீடுகள் உள்ளன, அதில் 112 வீடுகள் மட்டுமே மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படுகின்றன. இதில் காலியாக உள்ள வீடுகளுக்காக 100 எம்பிக்கள் விண்ணப்பித்துள்ளதாகவும், அதில் தேசிய மக்கள் சக்தியின் 70 எம்பிக்களும் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும் நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.