பாடகி இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஐயப்ப பக்தா்கள்

திருவாடானை அருகேயுள்ள ஆா்எஸ் மங்கலம் காவல் நிலையத்தில் பாடகி இசைவாணியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஐயப்ப பக்தா்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு, சுவாமி ஐயப்பனை பற்றி பாடகி இசைவாணி தவறாக பாடிய பாடல் இணையத்தில் பரவியது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு ஆா் எஸ் மங்கலத்தை சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் ஐம்பதற்கும் மேற்பட்டோா் பஜனைக்கு பின்னா் ஆா்.எஸ்.மங்கலம் காவல் நிலையத்தினை முற்றுகையிட்டு இசைவாணி மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனா்.

மனுவை பெற்றுக்கொண்ட ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் மாவட்ட நிா்வாகத்தை அணுகி உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதி அளித்ததையடுத்து அவா்கள் அங்கிருந்து கலைத்து சென்றனா்.

Leave A Reply

Your email address will not be published.