வெள்ளப் பேரிடர் பாதிப்பு தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரை சந்தித்துக் கலந்துரையாடிய சிறீதரன்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுப்பிரமணியம் முரளிதரனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

குறிப்பாக, வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இடர் உதவிகளை வழங்குதல், இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்தல் உள்ளிட்ட அனர்த்த முகாமைத்துவச் செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

அதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் புனரமைக்கப்பட வேண்டியுள்ள உள்ளக வீதிகளைச் சீரமைத்தல் குறித்தும், அடுத்த ஆண்டுக்கான அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

இந்தச் சந்திப்பில் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளைச் செயலாளர் வீர்வாகு விஜயகுமார் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.