ஏடிஎம் மூலம் பிஎஃப் பணத்தை எடுக்கும் நடைமுறை கொண்டு வரப்பட உள்ளது – மத்திய அரசின் திட்டம்

EPFO​​3.0 என்ற திட்டத்தின் கீழ்வருங்கால வைப்பு நிதியில் மத்திய அரசு மாற்றங்களை செய்ய உள்ளது.

இந்தியாவில் எந்த ஒரு நிறுவனத்திலும் தனி நபருக்கு மாதம் ரூ.15 ஆயிரத்திற்கு மேல் சம்பளம் இருந்தால், அந்த ஊழியர் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) கணக்கில் சேர்க்கப்படுகிறார்.

அடிப்படை ஊதியம், அகவிலைப்படி, தக்கவைப்பு படிகள் போன்றவற்றை உள்ளடக்கிய அவர்களது சம்பளத்தில் 12 சதவீதத்தை பங்களிக்க வேண்டும். இதேபோல், நிறுவனமும் சம்பளத்தில் 12 சதவீதத்தை பிஎஃப் நிதிக்கு வழங்க வேண்டும்.

இந்த திட்டம் மூலம் ஊழியர்கள் ஓய்வு பெரும் போது குறிப்பிட்ட அளவிலான ஓய்வூதியம் கிடைக்கிறது. மருத்துவம் போன்ற அவசர தேவைகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் விண்ணப்பிது 3 நாட்களில் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

இந்நிலையில் மத்திய அரசு இந்த பிஎஃப் திட்டத்தில் புதிய மாற்றங்களை அமல்படுத்த உள்ளது. இதன் படி ஊழியர்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில் 12% ஆக உள்ள ஊழியர்களின் பங்களிப்பு வரம்பு நீக்கப்பட உள்ளது. ஊழியர்கள் விரும்பினால் கூடுதல் தொகையை செலுத்தலாம். ஆனால் நிறுவனம் வழங்கும் 12 சதவீதத்தில் மாற்றமில்லை.

மேலும், தற்போது பிஎஃப் எடுக்கும் முறை சிக்கலாக உள்ள நிலையில் அதை எளிமைப்படுத்தி ஏடிஎம் மூலம் பிஎஃப் பணத்தை எடுக்கும் நடைமுறை கொண்டு வரப்பட உள்ளது. EPFO​​3.0 என்ற இந்த திட்டத்தின் கீழ் கார்டு வழங்கி 2025 ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் மத்திய அரசு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.