மிகப்பெரிய கொக்கைன் படகை அவுஸ்திரேலியா பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய கொக்கைன் படகை கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு மத்திய பொலிஸார் அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2.3 தொன் கொக்கெய்ன் போதைப்பொருளின் பெறுமதி 494 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும், குயின்ஸ்லாந்து கடற்பகுதியில் இருந்து கப்பலுக்கு சென்று கொண்டிருந்த மீன்பிடி படகொன்றில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
கடலில் இருந்து 10 கடல் மைல் தொலைவில் கடலில் சோதனை நடத்திய மீன்பிடி படகில் இருந்த 13 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் இரண்டு சிறிய குழந்தைகளும் உள்ளடங்குவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பல மாதங்களாக விசாரணைக்கு பின் மோட்டார் சைக்கிள் கும்பல் ஒன்று இந்த கடத்தலை மேற்கொள்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸார் இந்த சோதனையை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடர பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.