9 நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை.
அமெரிக்க டாலருக்கு மாற்றாக போட்டி கரன்சியை அறிமுகப்படுத்த முயன்றால், அவற்றிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும் என, வரும் 20ம் தேதி, அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாடுகள். பிரிக்ஸ் மாநாட்டில் அங்கம் வகிக்கும் நாடுகள் டொலரில் இருந்து வெளியேறும் முயற்சியின் காரணமாகவே டொனால்ட் ட்ரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா உள்ளிட்ட 9 நாடுகள் புதிய நாணயம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.