நிவாரண விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்வதற்காக ஒன்று திரண்ட மக்கள்.

நேற்றைய தினம் (02) நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக புதிய அரசாங்கத்தின் இரண்டாம் கட்ட நிவாரண விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்வதற்காக பெருந்தொகையான மக்கள் கூடியிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
வார விடுமுறை முடிந்து நேற்று (02) அலுவலகங்கள் திறக்கப்பட்ட நிலையில் அதிகளவான மக்கள் ஒரே நேரத்தில் வருகை தந்துள்ளதாகவும், கடந்த 27 ஆம் திகதி முதல் விண்ணப்பங்களை வழங்குவதற்கான இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனால் அதனையும் மீறி பெருந்தொகையான மக்கள் பிரதேச செயலகத்திற்கு முன்பாக திரண்டுள்ளனர்.
விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்வதற்காக பிரதேச செயலக அலுவலகத்திற்கு அருகாமையில் அதிகளவான மக்கள் திரண்டிருந்தமையினால், அந்த அலுவலகத்திலிருந்து ஏனைய சேவைகளைப் பெற்றுக்கொள்ள வந்திருந்த ஏனைய வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.