இந்தியாவிற்கு வருகை தருமாறு விளாடிமிர் புட்டினுக்கு, நரேந்திர மோடி அழைப்பு
பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கு , இந்தியா வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக ரஷ்ய அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
புட்டினின் இந்தியப் பயணத்துக்கான திகதி 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிர்ணயிக்கப்படும் என்று ரஷ்ய அரசாங்கம் தெரிவித்தது.
2022 பிப்ரவரியில் தொடங்கிய ரஷ்யா-உக்ரேன் போருக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியா செல்வது இதுவே முதல் முறையாகும்.