இந்திய – இலங்கை கடற் படையினரால் கைப்பற்றப் பட்ட போதைப் பொருள் சரக்குகளுடன்,2 மீன்பிடி படகுகள் கொழும்பு துறைமுகத்துக்கு…
சுமார் 500 கிலோ ஐஸ் மற்றும் கொக்கெய்ன் போதைப் பொருளுடன் இந்தியகடற்படையினரால் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் சரக்குகளுடன் கூடிய2 பல நாள் மீன்பிடி படகுகள் மற்றும் கடத்தலுக்கு உறுதுணையாக இருந்தசந்தேகநபர்கள் குழு, இலங்கை கடற்படையின் கஜபாகு 1 என்ற கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில்,
கடற்படையினரால் நேற்று (02.12)கொழும்பு துறைமுகத்திற்கு கைதானோர்அழைத்து வரப்பட்டனர்.
இந்திய கடற்படையினருக்கும் , இலங்கை கடற்படையினருக்கும் இடையில்மேற்கொள்ளப்பட்ட உளவுத் தகவல் பரிமாற்றத்தின் பின்னர், கடந்த நவம்பர்மாதம் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் குறித்த இரண்டு படகுகளையும் இந்தியகடற்படையினர் கைப்பற்றினர்.
ஐஸ் போதைப்பொருள் கையிருப்பு, பல நாள் மீன்பிடிக் கப்பல்கள் மற்றும்சந்தேக நபர்களை இந்திய கடற்படையினர் இலங்கை கடற்படை கப்பலானகஜபாகுவிடம் நவம்பர் 29 அன்று ஒப்படைத்தனர். மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக கடற்படையினர் ஐஸ் போதைப்பொருள், பல நாள்மீன்பிடி படகுகள் மற்றும் சந்தேக நபர்களை நேற்று (02) நீதிமன்றத்தில்ஒப்படைக்க கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர்.