போராட்டத்தின் போது பொலிஸாரை கூரிய ஆயுதத்தால் தாக்கியது நாங்கள்அல்ல-அபிவிருத்தி அதிகாரிகள் கூறுகின்றனர்.

சப்–இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு காவலர்களை கூரிய ஆயுதத்தால் தாக்கியசம்பவத்தில் தமது சங்கத்தின் எவருக்கும் தொடர்பில்லையென பத்தரமுல்லகல்வி அமைச்சின் முன்பாக போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த ஐக்கியபாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்விராஜ் மனுரங்க தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
தற்போது பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆனால்நாம் தெளிவாக நினைவுபடுத்த விரும்புகிறோம். இங்கே சில IRC ஏஜெண்டுகளோஅல்லது சில குண்டர்களோ இல்லை. பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்கள் உள்ளனர். அப்படியானால் யாரோ சதிசெய்துவிட்டார்களா என்று தெரியவில்லை. ஆனால் எமது உறுப்பினர்கள் எவரும்அவ்வாறான வேலைகளில் ஈடுபடவில்லை என்பதை தெளிவாகக் கூறலாம் என்றார்”
ஆயுதத் தாக்குதலில் சிறிதளவு காயமடைந்த அதிகாரிகள் மூவரும் தற்போதுஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு
போராட்டத்தின் மத்தியில் இருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவரையும்,போராட்டக்காரர்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.