அப்பம் இறக்குவது போல , முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை குறைக்க முடியாது.

எதிர்கட்சியினரைப் போன்று பொய்களை பரப்பக்கூடிய வேறு எந்த கட்சியும் இல்லை என தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹெவகே தெரிவித்துள்ளார்.
தமக்கான தேசியப்பட்டியல் எம்.பி.க்களைக் கூட நியமிக்க முடியாத பலமற்ற எதிர்க்கட்சிகள் மிகச் சிறிய விடயத்தை முன்னிறுத்தி சில தவறான கருத்துக்களை பரப்ப முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
மேலும், ஆட்சியாளர்களின் பல சலுகைகள் குறைக்கப்பட்டு, சில அதிகாரங்கள் அரசியல் சாசனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதியினரது சிறப்புரிமைகளை நீக்குவதற்கு அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அதனை அப்பம் இறக்குவது போல , இரண்டு நாட்களில் நிறைவேற்ற முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.