வாட்ஸ்அப் பெருமளவில் ஹேக் செய்யப்படுகிறது.

வட்ஸ்அப் ஹேக்கர்களால் கையகப்படுத்தப்படுவது தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்தார்.
கடந்த சில வாரங்களில் இதுபோன்ற சுமார் 74 புகார்கள் வந்துள்ளன.
ஆன்லைன் விவாதத்திற்கு அழைப்பு விடுத்து ஹேக்கிங் நடைபெறுவதாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அது தொடர்பில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமானது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.