பாராளுமன்றத்தில் அர்ச்சுனாவை தாக்கியதாக குற்றஞ்சாட்டு
SJB நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா தம்மை தாக்கியதாக யாழ்.மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் Dr. இராமநாதன் அர்ச்சுனா குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் விதிகள் குறித்து கேள்வி எழுப்பிய அவர், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்துக்கு சென்றபோது இந்தச் சம்பவம் நடந்ததாகத் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மீதான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஆராய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் , எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தார்.
அங்கு சுஜித் சஞ்சய் பெரேராவால் தாக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுன குற்றஞ்சாட்டினார்.
“பிற்பகல் 02.30 மணியளவில் நான் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்குச் சென்றேன். விவாதத்திற்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைக் கேட்கச் சென்றேன். எப்படி நேரத்தை ஒதுக்குகிறீர்கள்? இன்று என்னிடம் எதுவும் சொல்லப்படவில்லை. நாளை நேரமில்லையா என்று கேட்கச் சென்றேன். அங்கு அதிகாரிகள் இருந்தனர். என்னை ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார்கள். மாலை 4:00 மணிக்கு டைம் கொடுக்கலாம் என்று சொன்னார்கள். இந்த நேரத்தை எப்படி செலவிடுவது என்று தெரிந்து கொள்ள விரும்பினேன். பின்னர் சுஜித் என்ற நபரிடமும் வேறு ஒருவரிடமும் பேசுமாறும் , அவர்கள் முடிவு செய்வார்கள் எனவும் சொன்னார்கள். அவர்கள் ஒரு முடிவு கூட எடுக்க முடியாது என்றார்கள்.கட்சித் தலைவரான எனக்கு பதில் வேண்டும் என கூறினேன். அப்போது சுஜித் என்பவர் என்னை அடித்தார்.
அதற்கு பதிலளித்த குழுவின் தலைவர், இது தொடர்பில் சபாநாயகரிடம் முறைப்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.