ஜனாதிபதியின் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் முன்வைத்த கொள்கைப் பிரகடனத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீ தரன் நேற்று (03) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று (03) இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஸ்ரீதரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
இனவாதத்தைப் பற்றிப் பேசாமல் இருப்பது துரதிஷ்டவசமானதும் துயரமானதுமான நிலைமையாகும். 2004 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை 20 வருடங்கள் இந்த பாராளுமன்றத்தில் ஒரு குழுவின் தலைவராக எமது பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் இருந்தார்.