நாட்டில் மீண்டும் இனவாதம் தலைதூக்காமல் இருப்பதை உறுதி செய்யும். பிரதமர் ஹரிணி அமரசூரிய.
அரச ஆணைக்கு மதிப்பளித்து நாட்டில் மீண்டும் இனவாதம் தலைதூக்காமல் இருப்பதை உறுதி செய்யும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (03) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான இரண்டு நாள் விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த பாராளுமன்றத்தில் அனைத்து மதங்கள் மற்றும் இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்கும் பெண்களுக்கும் அதிக பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்தது மக்கள் தான் என்றும் இது மக்களுக்கு கிடைத்த மாற்றத்தக்க வெற்றி என்றும் அவர் கூறினார்.
இவ்வாறானதொரு மாற்றத்திற்கு பொறுப்பேற்று பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதே ஜனாதிபதியின் கொள்கை பிரகடனமாகும் என பிரதமர் தெரிவித்தார். இந்த புதிய ஆணையின் மூலம் மக்கள் இனவாதத்தை தெளிவாக நிராகரித்துள்ளதாகவும், எனவே மக்களை பிளவுபடுத்தும் மரபை தோற்கடிக்க அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.