இனவாதத்தை உருவாக்கும் ஊடக சுதந்திரத்தை அரசு அனுமதிக்காது.

வடக்கில் 244 கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவற்றில் 10 கொண்டாட்டங்களில் சில சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அது குறித்த சட்டத்தை பொலிசார் அமுல்படுத்தியுள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் ,

இன, மத வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, வடக்கிலும் தெற்கிலும் உள்ள இலங்கையர்களுக்கு ஒரு ஆணையை வழங்கியுள்ளோம்.

கடந்த சில நாட்களாக, மாவீரர் கொண்டாட்டங்கள் குறித்து சமூகத்தில் பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன, இறந்த உறவினர்களை நினைவு கூரும் உரிமை உள்ளது. ஆனால், விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பு என்பதால், அந்த அமைப்புக்கு சொந்தமான கொடிகளைக் காட்டிக் கொண்டாடுவதற்கு வாய்ப்பில்லை என நான் கூறிய கருத்தை திரித்து, தவறான அர்த்தம் கொடுக்கும் வகையில் வெளியிடப்பட்டது.

இது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவில் புகார் அளித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடக்கில் 244 கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அதில் பத்தில் சில சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வடக்கில் நடைபெற்ற கொண்டாட்டங்களின் அடிப்படையில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பெரும் எண்ணிக்கையிலான திரிபுபடுத்தப்பட்ட செய்திகள் பரப்பப்பட்டன. கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற விடுதலைப் புலிகளின் கொண்டாட்டங்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி அவை தற்போது வடக்கில் நடத்தப்பட்டவை என்பது போல வெளியிடப்பட்டது.

அந்த புகைப்படங்களில் சில வெளிநாட்டில் நடத்தப்பட்ட நிகழ்வுகளாகும்.

Leave A Reply

Your email address will not be published.