மெரினாவில் ரோப்கார் சேவை – சென்னை மாநகராட்சி அறிவிப்பு
மெரினாவில் ரோப்கார் சேவை அமைக்க சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது.
சென்னையையில் மக்கள் தொகை, தொழில் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் சென்னை மாநகராட்சி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மெரினா கடற்கரை சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். நடைப்பயிற்சி, பொழுதுபோக்கிற்க்காக தினமும் பல்லாயிரக்கணக்கானோர் இங்கு வருகை தருகின்றனர்.
வார இறுதி நாட்களில் இந்த கூட்டம் இன்னும் அதிகரிக்கும். ஏற்கனவே நீச்சல் குளம், பூங்காக்கள், வாக்கிங் நடைபாதை, ராம்ப் வாக் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மெரினா கடற்கரையில் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் உள்ளது போல் பெசன்ட் நகரில் இருந்து மெரினா கடற்கரை வரை ரோப்கார் சேவை கொண்டுவர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரோப் கார் சேவை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மெரினாவில் ரோப் கார் சேவைக்கான கட்டுமான பணிகளுக்கு டெண்டர் கோரி, சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. டிசம்பர் 17 ஆம் தேதிக்குள் டெண்டருக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும், வடிவமைப்பு, தொழில்நுட்ப அம்சங்கள் உட்பட விரிவான அறிக்கை, மதிப்பாய்வு ஆகியவற்றை அளிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.