ஒரு வழக்கில் இருந்து ஹிருணிகா விடுவிக்கப்பட்டார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ஹிருணிகா பிரேமச்சந்திர நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தி அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை நிறைவு செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அந்தக் குற்றச்சாட்டுக்களில் இருந்து அவரை விடுவிக்க இன்று (04) உத்தரவிட்டது.

திருமதி ஹிருணிகா பிரேமச்சந்திர, கல்கிசை நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவு தொடர்பில் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்த கருத்தை மீளப்பெறுவதாகவும், எதிர்காலத்தில் அவ்வாறான கருத்துக்களை வெளியிடப் போவதில்லை எனவும், திருமதி ஹிருணிகா பிரேமச்சந்திர தனது சட்டத்தரணி ஊடாக அறிவித்ததை அடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.